மத்திய நிதியமைச்சர் தலைமையில் மாநில அமைச்சர்கள் அடங்கிய 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
The 52nd meeting of the GST Council will be held on 7th October, 2023 at Vigyan Bhawan , New Delhi.
— GST Council (@GST_Council) September 26, 2023
“ஜிஎஸ்டி கவுன்சிலின் 52வது கூட்டம் 2023 அக்டோபர் 7ஆம் தேதி புது தில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும்” என்று ஜிஎஸ்டி கவுன்சில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
ஆகஸ்ட் 2 அன்று நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில், குதிரைப் பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் ஆகியவற்றின் வரிவிதிப்பு குறித்து தெளிவுபடுத்துவதற்காக சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சட்டங்களில் திருத்தங்களுக்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது. ஆன்லைன் கேமிங் மீது 28 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது.
ஜிஎஸ்டி கவுன்சில் என்பது இந்திய அரசியலமைப்பின் 279A பிரிவின் கீழ் நிறுவப்பட்ட ஒரு அரசியலமைப்பு அமைப்பாகும். இந்தியாவில் ஜிஎஸ்டியை அமல்படுத்துவது தொடர்பான பிரச்சனைகளில் யூனியன் மற்றும் மாநிலங்களுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு இதன் பொறுப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.