41 ஆண்டுகளுக்குப் பிறகு குதிரையேற்றம் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் டிரஸ்சேஜ் எனப்படும் குதிரையேற்றம் போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இந்திய அணி சார்பாக அனுஷ் அகர்வாலா , ஹிருதய் சேடா , திவ்யக்ரித்தி மற்றும் சுதிப்தி ஹஜெலா ஆகியோர் பங்குபெற்றனர். இதில் அதிகபட்சமாக அனுஷ் அகர்வாலா ETRO என்னும் குதிரையை கொண்டு 71.088 புள்ளிகளை பெற்றார். திவ்யக்ரித்தி, அட்ரினலின் ஃபிர்தோட் என்னும் அவரது குதிரையை கொண்டு 68.176 புள்ளிகளை பெற்றார்.
ஹிருதய் சேடா, எமரால்டு என்னும் அவரது குதிரையை கொண்டு 69.941 புள்ளிகளை பெற்றார். சுதிப்தி ஹஜெலா, சின்ஸ்கி என்னும் அவரது குதிரையைக் கொண்டு 66.706 புள்ளிகளை பெற்றார்.
மொத்தமாக இந்திய அணி 209.205 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இது இந்த 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் 3 வது தங்கமாகும்.
மேலும் 41 ஆண்டுகளுக்கு பிறகு குதிரையேற்றம் போட்டியில் இந்தியா முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
It is a matter of extreme pride that after several decades, our Equestrian Dressage Team has won Gold in Asian Games!
Hriday Chheda, Anush Agarwalla, Sudipti Hajela and Divyakriit Singh have displayed unparalleled skill, teamwork and brought honour to our nation on the… pic.twitter.com/9GtxWKcPHl
— Narendra Modi (@narendramodi) September 26, 2023
தங்கம் வென்ற போட்டியாளர்களை வாழ்த்தி பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ” பல தசாப்தங்களுக்குப் பிறகு எங்கள் குதிரையேற்ற அணியினர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றது மிகவும் பெருமைக்குரிய விஷயம். ஹிருதய் சேடா, அனுஷ் அகர்வாலா, சுதிப்தி ஹஜேலா மற்றும் திவ்யக்ரித் சிங் ஆகியோர் தங்களது இணையற்ற திறமையையும், குழுப்பணியையும் வெளிப்படுத்தி, சர்வதேச அரங்கில் நமது தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
இந்த வரலாற்று சாதனை படைத்த வீரர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்