மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இரண்டு நாள் பயணமாக, தென் மாவட்டங்கள் செல்ல உள்ளார்.
நாளை காலை, அதாவது 28-ம் தேதி அன்று, சென்னை விமான நிலையத்திலிருந்து தூத்துக்குடிக்கு மேதகு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செல்கிறார். அங்கிருந்து குற்றாலம் செல்லும் அவர், மாலையில் நடைபெறும் வேளாண்மை தொழில் முனைவோர்களுடன் கலந்துரையாடலில் பங்கு பெறுகிறார்.
அடுத்து, ஆழ்வார்குறிச்சி செல்லும் அவர், அங்கு பானை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடன் பேசுகிறார். பின்னர், அருள்மிகு சிவசைலம் திருக்கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோவிந்தப்பேரி ஊராட்சியில் உள்ள ஷோகோ கிராமத்தில் தங்குகிறார்.
அடுத்த நாள், அதாவது 29-ம் தேதி அன்று, காலையில், நெற்கட்டும் சேவலில் உள்ள பூலித்தேவர் மற்றும் ஒண்டிவீரன் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்துகிறார்.
இதனைத் தொடர்ந்து, ராஜபாளையத்தில் விஸ்வகர்மா சங்க பிரதிநிதிகளுடன் பேசுகிறார்.
மதியம் சாத்தூரில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை அதிபர்களுடன் கலந்துரையாடல் நடத்துகிறார். பின்னர், மாலையில் விருதுநகர் செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, அங்கு, முன்னாள் முதல்வர் காமராஜர் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். இரவு மதுரை வந்து, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைகிறார்.