சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 32 வயது ஜோதி என்பவருக்கு வலது கை அகற்றப்பட்டதில் மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜீனத். இவரது மனைவி, ஜோதி (வயது 32) இவருக்கு மார்பு வலி காரணமாக, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகக் கடந்த 15 -ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதய பரிசோதனை செய்ய வந்தவருக்கு, டாக்டர்கள் அலட்சியம் காரணமாக. அவரது வலது கை அகற்றப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
இது தொடர்பாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை தரப்பில், ஜோதி எனும் 32 வயது பெண்மணி தனியார் மருத்துவமனையில் ECG எடுத்துப் பார்த்ததில், இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்ததால், மேற்படி சிகிச்சைக்காக, சென்னை அரசு இராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கே அவருக்கு Angiogram பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் அவருக்குப் பரிசோதனை செய்த கையில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மற்றொரு கைக்கும் வீக்கம் பரவியுள்ளது. தொடர்ந்து பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு தமனிகளில் (Arteries)இரத்த அடைப்பு ஏற்பட்டது(Thrombosis)தெரிய வந்தது.
அதற்குக் காரணம் Idiopathic Systematic Arterial Thrombosis(காரணம் தெரியாத பல இடங்களில் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு)என கண்டறியப்பட்டுள்ளது.
வலது கையில் அடைப்பு அதிகம் எற்பட்டு இரத்த ஓட்டம் தடைப்பட்டு,கை அழுகிய நிலைக்குச் சென்றதால் உயிரைக் காக்க வலது கை முழங்கைக்கு மேல் அகற்றப்பட்டது. என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை விளக்கம் கொடுத்துள்ளது.
ஆனால், அரசு மருத்துவமனையின் இந்த விளக்கத்தை ஜோதியின் கணவர் ஏற்க மறுத்துள்ளார். ஜோதிக்கு மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதற்கு ஆஞ்சியோ சிகிச்சை செய்ய வேண்டும் எனத் தனியார் மருத்துவமனையில் தெரிவித்தனர்.
ஆஞ்சியோ சிகிச்சை செய்யத் தனியார் மருத்துவமனையில் செலவு அதிகம் ஆகும் என்பதால், அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம். ஆனால், அவர்கள் அலட்சியம் மற்றும் உரிய பரிசோதனை செய்யாமல், ஜோதியின் வலது கையை அகற்றிவிட்டனர் எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், தனது மனைவிக்கு நேர்ந்த கதிக்குக் காரணமான டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜோதியின் கணவர் ஜீனத் தெரிவித்துள்ளார். இல்லையெனில், சட்டப் போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.