பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!
Oct 28, 2026, 03:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூபாய் 2.85 கோடி கிடைத்துள்ளது.

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 27, 2023, 01:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது உண்டியல் நிரம்பியவுடன், திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், வெள்ளிப் பொருட்கள், தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரித்து எண்ணுவர்.


அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது. அதன் பிறகு, 26-ந் தேதி காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

பழனி முருகன் கோயிலில், உண்டியல் காணிக்கை மூலம், 2 கோடியே 85 இலட்சத்து 87 ஆயிரத்து 263 ரூபாயும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 901 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்தன.

இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 1,070 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 13 கிலோ 250 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

Tags: Palani MuruganPalani Murugan temple
Share
Tweet
SendShare
Previous Post

சென்னையில் பெண் வலது கை அகற்றம் – அரசு டாக்டர்கள் அலட்சியமா?

Next Post

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies