வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!
Oct 28, 2026, 03:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!

Murugesan M by Murugesan M
Sep 27, 2023, 01:21 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

 மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் உற்பத்தித் துறையில் தற்சார்பை அடைவதற்கான  பயணத்தில் ஒரு முக்கியமான நாள் என மத்திய சுகாதாரம், ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவிய கூறியுள்ளார்.

புது தில்லியில் மருந்து தொழில்நுட்பத் துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று வெளியிட்டார். அத்துடன் மருந்து தொழில்நுட்பத்துறையில் புதுமைக் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான திட்டத்தையும் அவர்  அறிமுகப்படுத்தினார்.

இந்த திட்டத்தின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, மருந்துகளின் உலகளாவிய சந்தையில் இந்தியாவை அதிக பங்களிப்புக் கொண்ட நாடாக மாற்றுவதில் இந்தத் திட்டம் கவனம் செலுத்தும் என்று கூறினார். புத்தொழில் நிறுவனங்கள் மூலம் இளைஞர்களின் திறன்களுக்கு ஊக்கமளிக்கவும் இந்த கொள்கை உதவும் என்று கூறினார்.

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். மருந்து பொருட்கள் மற்றும் மருத்துவ சாதனங்களை நாம் பெருமளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்காக, இமாச்சலப் பிரதேசம், விசாகப்பட்டினம் மற்றும் குஜராத்தில் மூன்று மொத்த மருந்து பூங்காக்களையும் , இமாச்சலப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் நான்கு மருத்துவ சாதன பூங்காக்களும் உருவாக்கப்படுவதாக அவர் கூறினார். இது இந்த துறையை வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார்.

உயிர் காக்கும் மருந்துகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கும், உலகளாவிய மருத்துவ ஏற்றுமதி மையமாக இந்தியா மாறுவதற்கும், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று  கூறினார்.

இதன் மூலமாக  மட்டுமே இந்தியா மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களில் தன்னிறைவை அடைய முடியும் என்று தெரிவித்தார். தொழிற்சாலைகள் மற்றும் கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து, நம் நாடு, உலகின் தேவைகளுக்கு ஏற்ப கொள்கைகள், புதிய தயாரிப்புகள் மற்றும் புதிய ஆராய்ச்சிகளை உருவாக்க வேண்டும் என்று கூறினார். நமது முக்கிய தேவைகளுக்கு யாரையும் சார்ந்திருக்காத அளவில் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Tags: Mansukh Mandaviya
Share
Tweet
SendShare
Previous Post

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 2.85 கோடி!

Next Post

X என்னும் புதிய வைரஸ்

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies