தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க கர்நாடகா அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனையடுத்து, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கர்நாடகா அணைகளிலிருந்து காவிரியில் தமிழகத்துக்கு அடுத்து வரும் 15 நாட்களுக்கு 3,000 கன அடி நீர் திறக்க வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்குக் காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
ஆனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகா அணைகளில் நீர் இல்லை எனக் கர்நாடகா அரசு கைவிரித்துவிட்டது.
இந்த நிலையில்தான், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் டெல்லியில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.