குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள அறிவியல் நகரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். ரோபோட்டிக்ஸ் காட்சியகம், இயற்கை பூங்கா, நீர்வாழ் காட்சியகம், சுறா சுரங்கப்பாதை ஆகியவற்றை நடந்து சென்று அவர் பார்வையிட்டார்.
இது குறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,
குஜராத் அறிவியல் நகரத்தில் உள்ள சிறப்புகளைப் பார்வையிட்டு காலை நேரத்தின் ஒரு பகுதியை செலவிட்டேன். ரோபோடிக்ஸ் காட்சியகத்தை முதன்முதலாக பார்வையிட தொடங்கினேன். அங்கு ரோபோடிக்ஸின் மகத்தான திறன் அற்புதமாக காட்சிப்படுத்தப்படுகிறது. இந்த தொழில்நுட்பங்கள் இளைஞர்களிடையே ஆர்வத்தை எவ்வாறு தூண்டுகின்றன என்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.
Exploring serenity and the splendid biodiversity at the Nature Park! pic.twitter.com/PWt629EZbl
— Narendra Modi (@narendramodi) September 27, 2023
“ரோபோடிக்ஸ் காட்சியகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன ரோபோக்கள், மைக்ரோபோட்ஸ், விவசாய ரோபோ, மருத்துவ ரோபோக்கள், விண்வெளி ரோபோ மற்றும் பல காட்சிப்படுத்துகிறது. இந்த கவர்ச்சிகரமான கண்காட்சிகள் மூலம், சுகாதாரம், உற்பத்தி மற்றும் அன்றாட வாழ்க்கையில் ரோபோட்டிக்ஸின் உருமாற்ற சக்தி தெளிவாகத் தெரிகிறது.
“ரோபோட்டிக்ஸ் காட்சியகத்தில் உள்ள கஃபேயில் ரோபோக்கள் வழங்கிய ஒரு கப் தேநீரையும் அருந்தி அனுபவித்தேன்.”
“இயற்கை பூங்கா பரபரப்பான குஜராத் அறிவியல் நகரத்திற்குள் ஒரு அமைதியான மற்றும் பிரமிக்க வைக்கும் இடமாகும். இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடமாகும்.
இந்த பூங்கா பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், மக்களுக்கு ஒரு கல்வி தளமாகவும் செயல்படுகிறது.
“நுணுக்கமான நடைபாதைகள் வழியில் பல்வேறு அனுபவங்களை வழங்குகின்றன. இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நீடித்த தன்மை குறித்த மதிப்புமிக்க பாடங்களை வழங்குகிறது. கற்றாழை தோட்டம், தொகுப்பு மரம் நடுதல், ஆக்ஸிஜன் பூங்கா மற்றும் பல்வேறு சிறப்புகளை பார்வையிட்டேன்.
“அறிவியல் நகரத்தில் உள்ள நீர்வாழ் காட்சியகம் நீர்வாழ் பல்லுயிர் மற்றும் கடல் அதிசயங்களின் கொண்டாட்டமாகும். இது நமது நீர்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளின் நுட்பமான ஆனால் மாறும் சமநிலையை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு கல்வி அனுபவம் மட்டுமல்ல, அலைகளுக்கு அடியில் உள்ள உலகத்தைப் பாதுகாப்பதற்கான அழைப்பு மற்றும் ஆழ்ந்த மரியாதைக்கான அழைப்பும் கூட.”
“சுறா சுரங்கப்பாதை என்பது பல்வேறு வகையான சுறா இனங்களை வெளிப்படுத்தும் ஒரு பரவசமான அனுபவமாகும். சுரங்கப்பாதை வழியாக நீங்கள் நடந்து செல்லும்போது, கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மையைக் கண்டு நீங்கள் பெரிதும் ஆச்சரியப்படுவீர்கள். இது உண்மையிலேயே வசீகரமானது.”
“இது அழகாக உள்ளது ” எனத் தெரிவித்துள்ளார்.