பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!
Mar 15, 2026, 01:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:04 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாட்டக்குளம் சல்லிப்பட்டியில் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 750 ஆண்டுகள் பழமை வாய்ந்த துலாக்கல் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் நெம்புகோல் அமைப்பு துலா அல்லது ஏற்றம் எனப்படுகிறது. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மழைநீர் கிடைக்காமல் கண்மாய், குளங்கள் வறண்டு இருக்கும் போது, கிணறுகள் தோண்டப்பட்டு பயன்படுத்தப்படுவது வழக்கம்.

இத்தகைய கிணறுகளை அப்பகுதிகளின் ஆட்சியாளர்கள், வணிகர்கள் போன்றோர் அமைத்துத் தந்துள்ளார்கள். இது போன்ற கிணறுகள் பாண்டியர் காலம் முதல் வழக்கத்தில் உள்ளது.

கோயில் அருகில் வெட்டப்பட்டுள்ள கிணறுகள், திருமஞ்சன கிணறுகள் என்றும், வழிப்பாதைகளில் அமைந்துள்ள கிணறுகள், பொதுக்குடிநீர் கிணறுகள் என்றும் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தில் தலைவர் ராஜகுரு, நுார்சாகிபுரம் சிவக்குமார் கூறியதாவது:

இதுகுறித்து, இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு கூறியதாவது, பாட்டக்குளம் சல்லிப்பட்டி பாலாண்டி அய்யனார் கோயில் முன்பு 7 அடி உயரமும், ஒன்றரை அடி அகலமும், மேற்பகுதி குறுகலாகவும் உள்ள செவ்வக வடிவிலான ஒரு கல் தூண் உள்ளது.

இந்த கல் தூணின் கீழ்ப்பகுதியில் 5 வரியில் அமைந்த ஒரு கல்வெட்டு உள்ளது. இதில் ஸ்வஸ்திஸ்ரீ இத்தன்மம் அரியான் சோறனான விசைய கங்கர் செய்தது என எழுதப்பட்டுள்ளது.

இக்கோயில் பாட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ளது. இது கிணற்றிலிருந்து நீர் இறைக்கப் பயன்படும் ஒரு துலாக்கல்.

அரியான் சோறனான விசைய கங்கர் என்பவர் கிணற்றையும், துலாக்கல்லையும் அமைத்து கொடுத்துள்ளார்.

கல்வெட்டு எழுதியதைக் கொண்டு, இது பிற்கால பாண்டியர்களின் கி.பி.13 முதல் 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என கருதலாம் என்று தெரிவித்தனர்.

Tags: archealogy
ShareTweetSendShare
Previous Post

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!

Next Post

இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!

Related News

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More

அண்மைச் செய்திகள்

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies