செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!
Jun 13, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:02 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாபநாசம் அருகே, செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசிய பெண், செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆடுதுறை விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது 9 வயதான மகன் பிரகதீஷ் உடன் தனியாக வசித்து வருகிறார்.

இவர் கபிஸ்தலத்தில் பிரகதீஷ் என்ற பெயரில் செல்போன் சரி செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

வழக்கம்போல் கடைக்கு வந்த கோகிலா, செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு, தனது பணிகளை மேற்கொண்டுள்ளார். அப்போது, செல்போனில் சார்ஜ் போட்ட படி பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்ததில், கடை முழுவதும் மளமளவென தீ பரவியது. கடையின் உள்ளிருந்த கோகிலா தீயில் சிக்கிக் கொண்டு கூச்சலிட்டார். தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த மக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

இருப்பினும், தீயில் சிக்கிய கோகிலா, உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், கபிஸ்தலம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை, கோகிலாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, வழக்குப் பதிவு செய்த காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செல்போன் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags: cellphone
ShareTweetSendShare
Previous Post

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்வு!

Next Post

பழமை வாய்ந்த துலாக்கல் கண்டுபிடிப்பு!

Related News

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

சட்டமன்ற தேர்தல் தோல்வி – அதிமுக மாவட்ட நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies