தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!
Mar 15, 2026, 08:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 12:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் அக்டோபர் மாதம் 17-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வரைவு வாக்காளர் பட்டியல், தற்போது அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு, செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சமயத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கள ஆய்வு செய்யப்படும். இதன் பிறகு, ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

அதேபோல, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கும் நாளன்று, சரிபார்ப்புக்கு வசதியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அந்த வகையில், இந்தாண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் மாதம் 17-ம் தேதி தொடங்கும் என்றும், அன்றையதினமே வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில், தற்போது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி திடீரென மாற்றப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் அக்டோபர் 17-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும தேதி மாற்றப்பட்டிருக்கிறது. அதன்படி, அக்டோபர் 17-ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 27-ம் தேதி வெளியிடப்படும்.

இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் அன்றைய தினமே வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளும் தொடங்கும். ஆகவே, அக்டோபர் 27-ம் தேதி முதல் டிசம்பர் 12-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடக்கும் காலக்கட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காக வாக்குச்சாவடிகளில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்கள், டிசம்பர் 26-ம் தேதி வரை பரிசீலிக்கப்படும். பின்னர், இதனடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஜனவரி 5-ம் தேதி மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.

வாக்காளர் பட்டியல் திருத்த காலக்கட்டத்தில் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பத்தையும் அளிக்கலாம். பல மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகங்கள் ஆதார் இணைப்புக்கான முகாம்களை நடத்தி வருகின்றன. ஆனால், நகர்ப்புறங்களில் ஆதார் இணைப்பு குறைவாக உள்ளது” என்றார்.

Tags: Tamil NaduElection commissionerReleaseddraft voter listoctober 27
ShareTweetSendShare
Previous Post

குடும்பப் பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம் பெருமையை மட்டுமே பேசுவது திமுகவுக்கு வழக்கம்-அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் – ப.சி-க்கு காங்கிரஸார் எச்சரிக்கை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies