வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
Mar 15, 2026, 04:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.விஸ்வநாதன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 28, 2023, 03:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயது மூப்பு காரணமாக, வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், தனது 98-வது வயதில் சென்னையில் இன்று காலை 11.20 மணியளவில் காலமானார். அவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 1925-ம் ஆண்டு ஆகஸ்ட் 7-ம் தேதி பிறந்தார் எம்.எஸ். சுவாமிநாதன். இவரது இயற்பெயர் மான்கொம்பு சாம்பசிவம் சுவாமிநாதன் என்பதாகும். கும்பகோணத்தில் பள்ளிப் படிப்பை முடித்த இவர், பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்றார். பின்னர், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர், கேம்ப்ரிட்ஜில் தன்னுடன் படித்த மீனா என்பவரை மணந்தார்.

இத்தம்பதிக்கு சௌமியா சுவாமிநாதன் (குழந்தை மருத்துவர்), மதுரா சுவாமிநாதன் (பொருளாதார நிபுணர்), மற்றும் நித்யா சுவாமிநாதன் (பாலினம் மற்றும் கிராமப்புற மேம்பாடு) என 3 மகள்கள் உள்ளனர். இந்தியாவின் பசுமைப் புரட்சியை முன்னின்று நடத்திய எம்.எஸ்.சுவாமிநாதன், சர்வதேச அளவில் புகழ் பெற்றார். பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் இவர், சூழலியல் பொருளாதாரத்தின் தந்தை என்று ஐக்கிய நாடுகள் சபையால் பாராட்டப்பட்டவர்.

இவரது மறைவுக்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். நமது தேசத்தின் வரலாற்றில் மிக முக்கியமான காலக்கட்டத்தில், விவசாயத்தில் அவர் செய்த திருப்புமுனையான பணி லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியது. மேலும், நமது தேசத்திற்கு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தது. விவசாயத்தில் அவர் ஆற்றிய புரட்சிகரப் பங்களிப்புகளுக்கு அப்பால், டாக்டர் சுவாமிநாதன் புதுமையின் ஆற்றல் மையமாகவும், பலருக்கு வழிகாட்டியாகவும் இருந்தார்.

ஆராய்ச்சி மற்றும் வழிகாட்டுதலுக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, எண்ணற்ற விஞ்ஞானிகள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் மீது அழியாத முத்திரையைப் பதித்திருக்கிறது. டாக்டர் சுவாமிநாதனுடனான எனது உரையாடல்களை நான் எப்போதும் போற்றி மகிழ்வேன். இந்தியா முன்னேற்றம் காண வேண்டும் என்ற அவரது ஆர்வம் முன்மாதிரியாக இருந்தது. அவரது வாழ்க்கையும் பணியும் வரும் தலைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கும். அவரது குடும்பத்தினருக்கும், பின் தொடர்பாளர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி!” என்று தெரிவித்திருக்கிறார்.

Deeply saddened by the demise of Dr. MS Swaminathan Ji. At a very critical period in our nation’s history, his groundbreaking work in agriculture transformed the lives of millions and ensured food security for our nation. pic.twitter.com/BjLxHtAjC4

— Narendra Modi (@narendramodi) September 28, 2023

 

அதேபோல, தமிழக அளுநர் ஆர்.என்.ரவி, தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் பதிவில், “பசுமைப் புரட்சியின் தந்தையும் நவீன பாரதத்தை உருவாக்கியவருமான டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல். அவர் எப்போதும் நம் இதயங்களிலும் மனதிலும் வாழ்வார். துயரமான இந்த நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆதரவை தெரிவிக்கிறேன். ஓம் சாந்தி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Tags: PM ModicondolenceM.S. SwaminathanExpired
ShareTweetSendShare
Previous Post

போதைப் பொருள் வழக்கு: காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைது!

Next Post

மும்பைக்கு மஞ்சள் எச்சரிக்கை

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies