பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!
Mar 15, 2026, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 5 கோடி!

Murugesan M by Murugesan M
Sep 28, 2023, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் 5 கோடியே 9 இலட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாய் கிடைத்துள்ளது.

முருகனின் ஆறுப்படை வீடுகளில் பழனி முருகன் கோயில் மூன்றாம் படை வீடாக உள்ளது. இக்கோயிலுக்குத் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

இவ்வாறு கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனைப் பல்வேறு வகைகளில் செலுத்துகின்றனர். குறிப்பாக, தங்கம், பணம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றைக் காணிக்கையாக உண்டியலில் செலுத்துகின்றனர். இவ்வாறு செலுத்தப்படும் காணிக்கையானது உண்டியல் நிரம்பியவுடன், திறக்கப்பட்டு அதிலுள்ள பணம், வெள்ளிப் பொருட்கள், தங்கம், வெளிநாட்டுப் பணம் ஆகியவற்றை தனித்தனியாக பிரித்து எண்ணுவர்.

அதன்படி, கோவில் உண்டியலிலிருந்து பக்தர்கள் செலுத்திய காணிக்கைப் பொருட்கள் அதிகாரிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன் கோயில் மண்டபத்துக்குக் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கோயில் ஊழியர்களின் உதவியுடன் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள், வெளிநாட்டு கரன்சிகள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணும் பணி நடந்தது.

காணிக்கை எண்ணும் பணியில் தன்னார்வலர்கள், கோயில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் முடிவில், 5 கோடியே 9 இலட்சத்து 13 ஆயிரத்து 830 ரூபாயும், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளின் 1,366 கரன்சி நோட்டுகளும் காணிக்கையாகக் கிடைத்தன.

இதுதவிர தங்கச் சங்கிலி, மோதிரம், சிறிய வேல் உள்ளிட்ட 1,419 கிராம் மதிப்பிலான தங்கப்பொருட்களும், 18 கிலோ 185 கிராம் வெள்ளியால் செய்யப்பட்ட பொருட்களும் காணிக்கையாகக் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேபோல், இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் பணம் நேற்று திறந்து எண்ணப்பட்டது. இதில், கடந்த ஒரு மாத உண்டியல் வருமானமாக, 1 கோடியே 39 இலட்சத்து 22 ஆயிரத்து 935 ரூபாய், தங்கம் 216 கிராம் 200 மில்லி கிராமும், வெள்ளி 9 கிலோ 515 கிராமும் கிடைத்துள்ளது.

Tags: Palani Murugan temple
ShareTweetSendShare
Previous Post

 3 கோடி காணிக்கை!.. திருச்செந்தூரில் பக்தர்கள் தாராளம்!

Next Post

காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் முறைகேடு- அண்ணாமலை கண்டனம்!

Related News

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

Load More

அண்மைச் செய்திகள்

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies