பிச்சை எடுத்த குற்றத்திற்காக அரபு நாடுகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதம் பேர் பாகிஸ்தானியர்கள் என்பது தெரியவந்திருக்கும் நிலையில், யாத்ரீகர்கள் வேடத்தில் பிச்சைக்காரர்களை அனுப்ப வேண்டாம் என்று பாகிஸ்தானிடம் அரபு நாடுகள் வலியுறுத்தி இருக்கின்றன.
இந்தியாவிலிருந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி பாகிஸ்தான் என்கிற தனி நாடு பிரிந்து சென்றது. இதன் பிறகு, இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அந்த வகையில், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காஷ்மீரின் ஒரு பகுதியைக் கைப்பற்றியது.
ருசி கண்ட பூனை சும்மா இருக்குமா… தொடர்ந்து தீவிரவாதத்தை தூண்டி விட்டது. கடைசியாக 1999-ம் ஆண்டு பாகிஸ்தான் இராணுவத்தினரும் தீவிரவாதிகளும் கார்கில் பகுதியில் ஊடுருவி தாக்குதல் நடத்தினர். ஆனால், பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க. அரசு, நடத்திய பதிலடித் தாக்குதலில், தெறிந்து ஓடியது பாகிஸ்தான்.
இப்படி தீவிரவாதத்துக்கே அதிக பணத்தை செலவிட்டதால், அந்நாடு பொருளாதார நெருக்கடிகளை சந்திக்கத் தொடங்கியது. பொருளாதார நெருக்கடி ஒருபுறம், மறுபுறம் கடுமையான விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பெட்ரோல், மின்சாரக் கட்டணம் உயர்வு என பாகிஸ்தான் நாட்டு மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. இதனால் சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆகவே, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மக்கள் வேலை தேடி அரபு நாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். ஆனால், அரபு நாடுகளைப் பொறுத்தவரை திறமையான வேலைக்காரர்கள் மட்டுமே தேவைப்பட்டனர். அப்படிப்பட்ட வேலைக்காரர்கள் இந்தியாவில் இருந்தும், நேபாள், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் கிடைத்தனர்.
எனவே, பாகிஸ்தானியர்களை வேலைக்கு அமர்த்துவதை அரபு நாடுகள் தவிர்த்து வந்தன. அப்படியே வேலைக்கு அமர்த்தினாலும், சாதாரண பணிவிடையாட்களாக மட்டுமே நியமிக்கப்பட்டனர். மேலும், பாகிஸ்தானியர்களுக்கு வேலைக்கான விசா வழங்குவதையும் அரபு நாடுகள் குறைத்தன.
விளைவு… பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் வேலை இன்றித் தவிக்கும் நிலை ஏற்பட்டது. அதேசமயம், சாப்பாட்டுக்கு வழி வேண்டுமே, என்ன செய்வது? வேறு வழியின்றி பிச்சை எடுக்கத் தொடங்கினர். எனினும், பாகிஸ்தான் நாட்டிலிருந்து அரபு நாடுகளுக்கு வரும் பாகிஸ்தானியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே சென்றது.
எப்படி தெரியுமா? சவூதி அரேபியா நாட்டில்தான் இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா, மெதினா அமைந்திருக்கிறது. இந்துக்களாகப் பிறந்தவர்கள் எப்படி தங்களது இறுதிக் காலத்திற்குள் காசி, இராமேஸ்வரம் சென்று வருவதை புனிதக் கடமையாகக் கருதுகிறார்களோ, அதேபோல, இஸ்லாமியர்களாகப் பிறந்தவர்கள் இறப்பதற்கு முன்பு மெக்கா மெதீனா சென்று வருவது புனிதக் கடமையாகக் கருதப்படுகிறது.
இந்த பயணத்திற்குப் பெயர் “உம்ரா” என்று அழைக்கப்படுகிறது. ஆகவே, “உம்ரா” பயணம் மேற்கொள்வதாகக் கூறி சவூதி அரேபியாவுக்கு வந்து விடுகிறார்கள். பின்னர், கும்பல் கும்பலாக பிச்சை எடுக்கத் தொடங்கி விடுகிறார்கள். அதேசமயம், ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட பல அரபு நாடுகளில், பிச்சை எடுப்பது மிகப்பெரிய குற்றமாகக் கருதப்படுகிறது.
எனவே, பிச்சை எடுத்தவர்களை எல்லாம் பிடித்து சிறையில் தள்ளியது அந்நாட்டு அரசுகள். இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டர்களை கணக்கெடுத்தபோது, பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்திருக்கிறது. அதேபோல, இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா இருக்கும் பகுதியிலுள்ள சாலைகளில் பிக்பாக்கெட் அடிக்கும் குற்றவாளிகளும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களே என்பதும் தெரியவந்திருக்கிறது.
ஆகவே, பாகிஸ்தானிலிருந்து வரும் பிச்சைக்காரர்களை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சவுதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் வலியுறுத்தி இருக்கின்றன. இது உலக அரங்கில் பாகிஸ்தானை தலைகுனியச் செய்திருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, இந்த ஆய்வு முடிவுகள் தெரியவந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டை பலரும் கேலி, கிண்டல் செய்து வருகின்றனர். ஒரு காலத்தில் தீவிரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்து வருகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.