செப்டம்பர் 30-ம் தேதி ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை தொடங்கி வைக்கிறார்.
நாடு முழுவதும் உள்ள 329 மாவட்டங்களில் உள்ள 500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ கடைபிடிக்கப்படும். ‘சங்கல்ப் சப்தாஹ்’வில் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது, அதன் அடிப்படையில் அனைத்து ஆர்வமுள்ள வட்டாரங்களும் செயல்படும்.
புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ‘சங்கல்ப் சப்தாஹ்’ என்ற பெயரில் நாட்டில் ஆர்வமுள்ள வட்டாரங்களுக்கான ஒரு வார கால தனித்துவமான திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி காலை 10 மணியளவில் தொடங்கி வைக்கிறார்.
‘சங்கல்ப் சப்தாஹ்’ என்பது அபிலாஷை வட்டாரங்கள் திட்டத்தை (ஏபிபி) திறம்பட செயல்படுத்துவதோடு இணைக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்த திட்டம் ஜனவரி 7, 2023 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது.
குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக வட்டார அளவில் நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் 329 மாவட்டங்களில் உள்ள 500 விருப்பமுள்ள வட்டாரங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
விருப்பமுள்ள வட்டாரங்கள் திட்டத்தை செயல்படுத்தவும், பயனுள்ள தொகுதி மேம்பாட்டு உத்தியை தயாரிக்கவும், நாடு முழுவதும் கிராமம் மற்றும் வட்டார அளவில் சிந்தனை அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
500 வட்டாரங்களிலும் ‘சங்கல்ப் சப்தாஹ்’ அனுசரிக்கப்படும். 2023 அக்டோபர் 3 முதல் அக்டோபர் 9, 2023 வரை ‘சங்கல்ப் சப்தாஹ்’ ல் ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட வளர்ச்சி கருப்பொருளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
முதல் ஆறு நாட்களுக்கான கருப்பொருள்களில் ‘சம்பூர்ண ஸ்வஸ்தியா’, ‘சுபோஷித் பரிவார்’, ‘தூய்மை’, ‘கிரிஷி’, ‘சிக்ஷா’ மற்றும் ‘சம்ரிதி திவாஸ்’ ஆகியவை அடங்கும்.
வாரத்தின் கடைசி நாளான அக்டோபர் 9, 2023 ‘சங்கல்ப் சப்தாஹ் – சமவேஷ் சமரோஹ்’ என்ற பெயரில் வாரம் முழுவதும் நடத்தப்பட்ட பணிகளின் கொண்டாட்டமாக இருக்கும்.
பாரத் மண்டபத்தில் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 3,000 பஞ்சாயத்து மற்றும் வட்டார அளவிலான மக்கள் பிரதிநிதிகள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். மேலும், வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான நிர்வாகிகள், விவசாயிகள் மற்றும் பிற துறைகளைச் சேர்ந்தவர்கள் உட்பட சுமார் 2 லட்சம் பேர் மெய்நிகர் முறையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.