நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!
Jul 26, 2025, 10:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நட்சத்திர ஆய்வு செயற்கைகோள்: டிசம்பரில் செலுத்த இஸ்ரோ திட்டம்!

இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை என்றும் தகவல்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இஸ்ரோவின் இந்த ஆண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக ‘எக்ஸ்ரே போலரிமீட்டர்’ அல்லது ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை டிசம்பரில் ஏவ தயாராக இருக்கிறோம் என்று இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஜூலை மாதம் 14-ம் தேதி விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்கிற விண்கலத்தை கடந்த 2-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் தற்போது புவி சுற்றுவட்டப் பாதையைக் கடந்து சூரியனை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், சூரிய குடும்பத்துக்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ களமிறங்க இருக்கிறது. இது குறித்து இஸ்ரோ வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சூரிய குடும்பத்துக்கு வெளியே வாழக்கூடிய வளிமண்டலத்தைக் கொண்ட கிரகங்களை ரேடாரில் தேடும் பணிக்காக ‘எக்சோ வேர்ல்ட்ஸ்’ என்ற செயற்கைகோளை உருவாக்கி வருகிறோம். இதுவரை சுமார் 5,000 புறக்கோள்கள் (எக்சோ பிளானெட்டுகள்) கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன.

பூமியைப் போன்ற வளிமண்டலம் இருப்பதால் 100-க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வாழக்கூடியதாக இருக்கலாம். ஒரு நட்சத்திரத்தில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் வளிமண்டலத்தைக் கடந்து செல்லும்போது மாற்றமடைகின்றன. அத்தகைய நிறமாலை பண்புகளை விண்வெளி ஆய்வு மையம் ஆய்வு செய்யும். அவை பூமியால் உருவாக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துமா என்பதையும் கண்டறியும். மேலும், புறக்கோள்களின் வளிமண்டல குணாதிசயங்களை தெரிந்து கொள்வதற்காக, இந்திய விண்வெளி ஆய்வுக் கருவிகள் அகச்சிவப்பு, ஒளியியல் மற்றும் புற ஊதா நிற மாலைகளில் கதிர்வீச்சை பகுப்பாய்வு செய்யும்.

இதன் மூலம் கிரகங்களின் வளிமண்டலம் எதனாலானது என்பது நமக்குத் தெரியவரும். இது தவிர, செவ்வாய் கிரக ஆய்வுக்கான லேண்டர் திட்டங்களும் ஆரம்பக் கட்டத்தில் உள்ளன. அதேசமயம், வீனஸ் (சுக்கிரன்) பயணத்திற்கான 2 கருவிகள் தயாராகி வருகின்றன. வீனஸ் மேற்பரப்பு பூமியை விட 100 மடங்கு வளிமண்டல அழுத்தத்தை கொண்டுள்ளது. ஆனால், இதற்கான காரணங்கள் தெரியவில்லை. மேலும், வீனஸை சூழ்ந்திருக்கும் அடர்த்தியான மேகங்கள் அமிலத்தால் நிரம்பியுள்ளன. இதனால் மேற்பரப்பைக் கூட ஊடுருவ முடியாது.

எனினும், வீனஸ் போன்ற கிரகங்களின் பரிணாம வளர்ச்சியைப் புரிந்துகொள்வது அவசியமாகும். வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களை ஆய்வு செய்தால், பூமியில் நம்முடைய செயல்பாடுகளினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அறிய முடியும். எல்லவற்றுக்கும் மேலாக, இஸ்ரோவின் இந்தாண்டுக்கான ஆழமான விண்வெளி சாகசம் இன்னும் முடிவடையவில்லை. ஏனெனில், இறக்கும் நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மர்மங்களை புரிந்துகொள்வதற்கான ஆய்வுப் பணிக்காக இஸ்ரோ ‘எக்ஸ்ரே போலரிமீட்டர்’ அல்லது ‘எக்ஸ்போசாட்’ என்ற செயற்கைகோளை டிசம்பரில் ஏவ இஸ்ரோ தயாராக இருக்கிறது.

450 கிலோ எடையுள்ள இந்த செயற்கைகோள் பிரகாசமான எக்ஸ்ரே பல்சர்களின் துருவமுனைப்பை அளவிடுவதற்கும், பிரகாசமான கருத்துகள் மூலங்களின் பொறிமுறையை புரிந்துகொள்வதற்கும் 2 கருவிகளை கொண்டுள்ளது. தற்போது எக்ஸ்ரே மூலங்கள் ஆற்றல், நேரம் மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை அளவிடுகின்றன” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Tags: ISROStudy StarsMission
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் வளர்ச்சிக்கோர் அற்புத திட்டம்!

Next Post

மூன்று பதக்கங்களை வென்ற இந்திய வீராங்கனை இஷா சிங் !

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies