சென்னையில், பிரபல நடிகர் மோகன் சர்மா மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மோகன் சர்மா திரைப்படங்களிலும் தற்போது தொலைக்காட்சி தொடரிலும் நடித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தோடு சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில், தி.நகர் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது, மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் சர்மாவை வழிமறித்து கடுமையாகத் தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் நடிகர் மோகன் சர்மாவுக்கு இரண்டு கண்களுக்குக் கீழே காயமும், கால் மற்றும் கால் முட்டிகளில் பாதிப்பும் ஏற்பட்டுள்ளன.
இதனையடுத்து, மோகன் சர்மா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மோகன் சர்மாவுக்கு, போயஸ் கார்டனில் வீடு உள்ளதாகவும், அந்த வீடு விற்பனை தொடர்பாக இடைத்தரகர்கள் சிலருக்கும் மோகன் சர்மாவுக்கும் இடையே முன்பகை இருந்தது வந்ததாகவும், அதன் பேரிலேயே இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளதாவும் தெரிய வந்துள்ளது. மேலும், விசாரணை நடத்தி வருகின்றனர்.