குவாலியர் ரயில் நிலையத்தை மறுசீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதற்குப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து அதில் தமது கருத்துகளை பிரதமர் மோடி கூறியுள்ளார்.
बहुत खूब! देशभर के रेलवे स्टेशनों का कायाकल्प करना हमारी सरकार की प्राथमिकता है। अत्याधुनिक सुविधाओं के साथ ग्वालियर रेलवे स्टेशन के विकसित होने से यात्रियों का सफर बहुत आसान होने वाला है। https://t.co/4ZZd94o2W2
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
எக்ஸ் பதிவில் பிரதமர் மோடி,
“மிகவும் நல்ல விஷயம்! நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைப்பது அரசின் முன்னுரிமை நடவடிக்கையாகும். குவாலியர் ரயில் நிலையத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்துவதன் மூலம், அந்த நிலையத்திற்கு வரும் பயணிகளின் பயணம் மிகவும் எளிதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.