தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!
Sep 9, 2026, 07:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

இந்தியக் குழுவுக்குத் தலைமை வகித்த இணையமைச்சர் எல். முருகன்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 04:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உஸ்பெகிஸ்தானில் 15 வது தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழாவின் (டி.ஐ.எஃப்.எஃப்) தொடக்க விழாவில்  இந்தியாவின் சார்பாக தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்து கொண்டார். இந்தியாவின் ஆடியோ-விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து முருகன் உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு விளக்கினார்.

இந்தியக் குழுவில் மூத்த திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குநருமான உமேஷ் மெஹ்ரா மற்றும் தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழக (என்.எஃப்.டி.சி) அதிகாரிகள்  பங்கேற்றனர்.

இந்தியாவும் உஸ்பெகிஸ்தானும் சோவியத் யூனியன் காலத்தில் இருந்து, திரைப்படத் தயாரிப்பில் வலுவான ஒத்துழைப்புப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளன. என்.எஃப்.டி.சி மற்றும் உஸ்பெகிஸ்தான் கினோ (உஸ்பெக் பிலிம்ஸ்) ஆகியவற்றின் கூட்டு செயல்பாடுகளால் இந்த ஒத்துழைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, உஸ்பெகிஸ்தான் கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஒசோத்பெக் நாசர்பெகோவை அமைச்சர் முருகன் சந்தித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பு மற்றும் ஒத்துழைப்பை இரு தரப்பினரும் குறிப்பிட்டனர். மேலும் திரைப்படத் தயாரிப்பு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான இந்திய அரசின் வலுவான கொள்கைகளுக்கு வலு சேர்க்கும் வகையில் இந்தியாவின் ஆடியோ-விஷுவல் துறையில் காணப்படும் மகத்தான வளர்ச்சி குறித்து முருகன் உஸ்பெகிஸ்தான் தரப்பிற்கு விளக்கினார்.

கூட்டுத் தயாரிப்பு, படப்பிடிப்பு மற்றும் தயாரிப்புக்குப் பிந்தையப் பணிகள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த திரைப்படத் துறையினர் மற்றும் மாணவர்களுக்கு இந்தியத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பயிற்சி அளிக்க இந்தியா தயாராக உள்ளது என இந்தச் சந்திப்பின்போது தெரிவிக்கப்பட்டது.

தாஷ்கண்ட் திரைப்பட விழாவின் போது, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துணை அமைச்சர்    பி. மும்கு தலைமையிலான துருக்கிய தூதுக்குழுவையும் எல். முருகன் சந்தித்தார்.

இந்தியாவில் படப்பிடிப்பு நடத்துவதற்கான சிறந்த வாய்ப்புகள் குறித்தும், இந்தியாவில் திரைப்படத் தயாரிப்பில் உள்ள அதிநவீன தொழில்நுட்ப உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவது குறித்தும் துருக்கி தரப்புக்கு இந்தச் சந்திப்பின்போது விளக்கிக் கூறப்பட்டது.

Tags: L MuruganTashkent International Film Festival
Share
Tweet
SendShare
Previous Post

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!

Next Post

குளு குளு கொடைக்கானல்: குவிந்த சுற்றுலாப் பயணிகள்!

Related News

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!

சவுதி அரேபியா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்; அமைதி காக்கும் பாகிஸ்தான் மற்றும் துருக்கி

கீவ் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகள் வீசி தாக்குதல்; ரஷ்யா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக வெறுப்புப் பேச்சு; திருந்தாத ஹபீஸ் சயீதின் மகன் ஹபீஸ் தல்ஹா சயீத்,

எம்எல்ஏ அலுவலகத்திற்குள் கட்சி கூட்டம்; ரீல்ஸ் வெளியிட்ட தவெக மகளிர் அணி நிர்வாகி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies