கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!
Oct 28, 2026, 01:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக்கூடாது: வங்கதேச அமைச்சர் ஆவேசம்!

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது துரதிருஷ்டவசமானது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 04:27 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனித உரிமைகள் பற்றிய கருத்து தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையிலேயே துரதிருஷ்டவசமானது. கனடா கொலைகாரர்களின் கூடாரமாகிவிடக் கூடாது என்று வங்கதேச வெளியுறவு துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்திருக்கிறார்.

கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சீக்கிய குருத்வாரா முன்பு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பின் தலைவன் ஹர்தீப் சிங் நிஜர், கடந்த ஜூன் மாதம் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், கனடாவுக்குமான இராஜதந்திர உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில், மனித உரிமைகள் என்கிற பெயரில் கனடா குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தருவதாக வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கூறியிருக்கிறார்.

அதாவது, பங்களாதேஷின் ஸ்தாபகத் தந்தை என்று அழைக்கப்படுபவர் ஷேக் முஜிபுர் ரஹ்மான். இவரும், இவரது குடும்ப உறுப்பினர்கள் 17 பேரும் கடந்த 1975-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டனர். இக்கொலையில் முக்கியக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களில் ஒருவர் இராணுவ அதிகாரி நூர் சௌத்ரி. இவர், தற்போது கனடாவில் வசித்து வருகிறார். ஆகவே, அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருவதற்காக, நூர் சௌத்ரியை நாடு கடத்தும்படி, கனடா அரசிடம் வங்கதேச அரசு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், கனடா அரசு மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி நாடு கடத்த மறுத்து வருகிறது.

இந்த நிலையில்தான், வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் கனடாவை கடுமையாகச் சாடி இருக்கிறார். இதுகுறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த அப்துல் மொமன், “கனடா கொலைகாரர்களின் கூடாரமாகி விடக் கூடாது. கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பம் கஷ்டத்தில் இருக்கும்போது, கொலையாளிகள் கனடாவில் தஞ்சமடைந்து, அற்புதமான வாழ்க்கையை வாழமுடிகிறது. கனடாவின் இந்த நிலைப்பாடு மற்றும் மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக அந்நாடு குற்றவாளிகளின் பாதுகாப்புக் கவசமாக மாறி வருகிறது.

மனித உரிமைகள் பற்றிய கருத்து பலரால் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுவது உண்மையில் துரதிருஷ்டவசமானது. ஏனெனில், கொலையாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை பாதுகாக்க மனித உரிமைகள் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவுடனும், கனடாவுடனும் நாங்கள் நல்ல உறவைக் கொண்டிருக்கிறோம். இரு நாடுகளும் எங்களுக்கு நண்பர்கள். கனடா குற்றவாளிகளின் கூடாரமாக மாறிவிடக் கூடாது. நாங்கள் சிலரை உடனடியாக நாடு கடத்துமாறு கனடா அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவர்கள் அப்பிரச்சனை குறித்து தற்போது எங்களிடம் பேசுவதில்லை” என்று கூறியிருக்கிறார்.

ஆக, கனடாவுக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் அழுத்தம் அதிகரித்து வருகிறது.

Tags: BangladeshCanadaattackForign minister
Share
Tweet
SendShare
Previous Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Next Post

தாஷ்கண்ட் சர்வதேச திரைப்பட விழா!

Related News

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

இடைத்தேர்தல் செலவை வேட்பாளர்களிடமே வசூலிக்க கோரும் வழக்கு – தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

மகளிருக்கான வெற்றிப் பயண திட்டம் – 12000 கோடி தேவைப்படும் நிலையில் 6000 கோடி ரூபாய்க்கு மட்டும் ஒப்புதல்!

அடுத்த மாதம் மீண்டும் த.வெ.க. அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆர்.பி.உதயகுமார் தகவல்!

பழனி முருகன் கோயில் நில மோசடி வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்!

தேனி தேக்கம்பட்டி சிறை காவலர்கள் மீது தாக்குதல் : 17 கைதிகள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies