ஆசிய விளையாட்டுப் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டியில் தங்கம் வென்ற ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே ஆகியோருக்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவுப் போட்டியில் 2-6, 6-3, 10-4 என்ற செட் கணக்கில் இந்தியா தங்கம் வென்றது.
What a great game by @rohanbopanna and @RutujaBhosale12. They bring back a prestigious Gold for India in Tennis Mixed Doubles. They have demonstrated remarkable team spirit and coordination. Best wishes for their future endeavours. pic.twitter.com/mR6wGBgR9q
— Narendra Modi (@narendramodi) September 30, 2023
இந்த வெற்றிக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக் குறித்து அவர், ” என்ன ஒரு சிறந்த விளையாட்டு. ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே இருவரும் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சிறந்த குழு உணர்வையும் ஒருங்கிணைப்பையும் வெளிப்படுத்தி இந்தியாவிற்கு மதிப்புமிக்க தங்கத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளனர். உங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் ” என்று பாராட்டியுள்ளார்.
Another feather to our glorious medal tally in the #AsianGames.
Kudos to @RutujaBhosale12 and @rohanbopanna for winning the🥇Gold Medal, in Tennis Mixed Doubles event. The nation celebrates the victory achieved by the duo and eagerly anticipates more moments of glory to come. pic.twitter.com/Jxh9z6IVpz— Amit Shah (@AmitShah) September 30, 2023
இவரைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக் கூறியுள்ளார். இதுக்குறித்து அவர், ” ஆசிய விளையாட்டுப் போட்டியில் நமது புகழ்பெற்றப் பதக்கப் பட்டியலில் மற்றொரு பதக்கம். டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றதற்காக ரோஹன் போபண்ணா மற்றும் ருதுஜா போசலே உங்கள் இருவரும் வாழ்த்துக்கள். உங்கள் வெற்றியை தேசம் கொண்டாடுகிறது ” என்று பதிவிட்டுள்ளார்.