மதுரை மாவட்டத்தில், அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அதன் முன்பக்க டயர் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டூ பேரையூர் வரை, தமிழக அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பயணம் செய்வது வழக்கம்.
வழக்கம்போல், இன்றும் அந்த சாலையில், பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இதைக் கண்டு ஓட்டுநர் மகஷே் திகைத்துப்போனார். அதற்குள் பேருந்து சாலையில் தரதரவென்று பெரிய சத்துடன் நின்றது.
இதில், பேருந்திலிருந்த பயணிகள் ஒருவர் மீது ஒவருர் சாய்ந்தனர். பயம் காரணமாகப் பேருந்திலிருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளைப் பத்திரமாகப் பேருந்திலிருந்து மீட்டனர்.
அரசு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கவில்லை, பேருந்துகள் பராமரிப்பு எனச் சொல்லிப் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டவுன் பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விழுந்து ஓடியது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையாகியுள்ளது.
மேலும், அரசு டவுன் பஸ்ஸில் முன்பக்க டயர் கழண்டு ஓடியதில், பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் ஓட்டுநர் பாண்டியராஜன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.