ஆசிய விளையாட்டில் ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் போட்டியின் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் இந்தியா பதக்கங்களை வென்று வருகிறது. அதிலும் துப்பாக்கி சுடுதலில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 50 மீட்டர் ட்ராப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி சார்பாக பிருத்விராஜ் தொண்டைமான், ஜோரவர் சிங் சந்து மற்றும் கினான் டேரியஸ் சென்னாய் ஆகியோர் பங்குபெற்றனர்.
இதில் இந்தியா 361 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. இதுமட்டுமின்றி 1994 குவைத்தின் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்த பதக்கம் இந்தியாவிற்கு 20 வது பதக்கம் ஆகும். மேலும் இதுவரை இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 15 வெண்கலம் உட்பட 42 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.