குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!
Oct 10, 2026, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 06:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். உலகப் புகழ் பெற்ற இந்த திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 24-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் முடிந்ததும், தங்களது வலது கையில் கப்புகட்டி பின்பு தங்களுக்குப் பிடித்தமான, சிவன், பார்வதி, காளி, துர்கை, கிருஷ்ணர், முருகன், அய்யனார், ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவர். இதில், சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41 மற்றும் 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.

திருவிழா தொடங்க இன்னும் இரண்டு வாரமே இருப்பதால், வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, சடைமுடி, நெற்றி பட்டை, வீரபல், ஒட்டியாணம் உட்பட பல்வேறு வேடப்பொருட்கள் உடன்குடி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தயாராகி, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

Tags: Kulasekarapattinam
Share
Tweet
SendShare
Previous Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Next Post

தாங்கிரி தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக ராகுல் பேசுவது ஏன்? – ராம் மாதவ் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

தமிழ் வம்சாவளியை சேர்ந்த நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

பிரதமர் மோடி சென்னை வருகை – தமிழக பாஜக சார்பில் ஃபிளாஷ் மாப் நடன நிகழ்ச்சி!

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies