தேச தந்தை மகாத்மா காந்தியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்களை பற்றி பாப்போம்.
இதில் முதலில் இருக்கும் படம் 1982 ஆம் ஆண்டு ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கத்தில் ஆங்கிலத்தில் வெளியாகிய காந்தி. இந்த படம் காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் 1982 ஆம் ஆண்டில் 8 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளது.
அடுத்ததாக 2007 ஆம் ஆண்டு ஃபெரோஸ் அப்பாஸ் கான் இயக்கத்தில் வெளியாகிய ‘ Gandhi my father ‘ என்ற திரைப்படம். இந்தப் படத்தை பாலிவுட் நடிகர் அனில் கப்பூர் தயாரித்துள்ளது. சந்துலால் பாகுபாய் தலால் என்பவர் ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்றை, ‘ஹரிலால் காந்தி’ என்ற பெயரில் எழுதிய நூலை அடிப்படையாக கொண்டு இப்படமானது எடுக்கப்பட்டுள்ளது
அடுத்ததாக 2005 ஆம் ஆண்டு ஜானு பருவா இயக்கத்தில், அனுபம் கெர் தயாரிப்பில், வெளிவந்த ‘Maine Gandhi Ko Nahin Mara’ என்ற திரைப்படம். இதன் தமிழ் அர்த்தம் நான் காந்தியை கொல்லவில்லை என்பதாகும்.
காந்தி திரைப்படங்கள் மற்றும் சித்தாந்தங்கள் பற்றி பேசும் போது, சஞ்சய் தத் நடித்த ‘லகே ரஹோ முன்னா பாய்’ படத்தை எப்படி மறக்க முடியும்? இது 2006 ஆம் ஆண்டு விது வினோத் சோப்ரா தயாரிப்பில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த நகைச்சுவை திரைப்படமாகும். காந்தியின் கருணை, அன்பு மற்றும் அகிம்சை ஆகியவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக குரிந்தர் சதா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு வெளியவந்த பார்ட்டிஷன் 1947 ( partition 1947 ) என்ற திரைப்படம். இந்த படம் 1947 ஆம் ஆண்டு மக்கள் பட்ட துன்பங்களையும், இந்து-முஸ்லிம் அன்பு மற்றும் சகோதரத்துவத்தில் ஏற்பட்ட பிளவுகளையும் எடுத்துரைக்கிறது.
அடுத்ததாக சமீபத்தில் வெளியான காந்தி கோட்சே ஏக் யுத் (Gandhi Godse Ek Yudh ) என்ற திரைப்படமாகும். இந்த படம் சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் நிலையை பற்றியும் நாதுராம் கோட்சேவுக்கும் மகாத்மா காந்திக்கும் இடையிலான சித்தாந்தங்களின் மோதலை எடுத்துக்காட்டுகிறது.