சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணமலை தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், பாரதியாரின் மீது மாறாப் பற்று கொண்டவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களது நினைவு தினம் இன்று.
சுதந்திரப் போராட்ட வீரரும், சிறந்த தமிழறிஞரும், பாரதியாரின் மீது மாறாப் பற்று கொண்டவருமான சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்களது நினைவு தினம் இன்று.
சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும். சிலப்பதிகாரம், பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர்,… pic.twitter.com/ryGoDFP6dW
— K.Annamalai (@annamalai_k) October 3, 2023
சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமை ம.பொ.சி. அவர்களையே சேரும். சிலப்பதிகாரம், பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர், கட்டபொம்மன் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
ஐயா வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களைப் பற்றி இவர் எழுதிய கப்பலோட்டிய தமிழன் என்ற நூலின் பெயரே, பின்னர் அவர் கப்பலோட்டிய தமிழன் என்று அழைக்கப்பட காரணமாக இருந்தது. மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை, திருத்தணி, குமரி மாவட்டம் பகுதிகள் தமிழகத்திலிருந்து பிரிக்கப்படாமல் இருக்க பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்ட ஐயா ம.பொ.சி. புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.