ஆசியா விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் 7 சிக்சர்களும் 8 பௌண்டரிஸும் எடுத்து சதம் அடித்த இந்திய வீரர் ஜெய்ஸ்வால்.
ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேராக காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
இதனால் இன்று இந்தியா நேபாளத்தை எதிர்கொண்டது. இதில் இந்திய அணி வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஷிவம் துபே, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் உள்ளனர்.
இன்றையப் போட்டியில் இந்தியா டாஸ் வென்றுப் பேட்டிங் தேர்வுச் செய்தது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் களமிறங்கினர். இதில் ருத்ராஜ் 25 ரன்களில் ஆட்டமிழக்க ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தினால் 49 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
மொத்தமாக ஜெய்ஸ்வால் 7 சிக்சர்களும் 8 பௌண்டரிஸும் அடித்து 100 ரன்களை எடுத்தார். இந்திய அணியின் மற்ற வீரர்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜெய்ஸ்வால் அடித்த 100 ரன்களால் இந்திய அணி 202 ரன்களை எடுத்து இதைப் போட்டியில் வெற்றிப் பெற்றது.