இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல், வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.
வங்கிகளில் கணக்கு தொடங்க வேண்டுமெனில், முன்பெல்லாம் நீண்ட வரிசையிலும், அதிக நாட்களும் காத்திருக்க வேண்டும். வங்கி அறிக்கை அல்லது கடன் அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டும். இந்த தாமதங்கள் தவிர்க்கப்பட்டிருப்பதோடு, ஒவ்வொரு செயல்பாட்டிலும் துல்லியத்தன்மையும் வெளிப்படைத் தன்மையும் அதிகரித்திருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, வங்கிகள் விரைந்து செயல்படுகின்றன. வாடிக்கையாளரின் இணையவழித் தேடுதலை அடியொற்றி, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம், வங்கிக்கு போதுமான உள்ளடக்கத்தை வழங்கி, அந்த வாடிக்கையாளருக்குச் சிறப்பான சேவையை வழங்க உதவுகின்றன. புதிய வாடிக்கையாளரை ஈர்க்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.
வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட வங்கி என்ற இலக்கை நிறைவேற்ற, என்.எல்.பி. போன்ற தொழில்நுட்பங்கள் உதவுகின்றன. வாடிக்கையாளர்களின் எழுத்து வடிவ கேள்விகளுக்கு ரோபோட்டுகள் பதிலளிக்கின்றன.
இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கல் வங்கிச் சேவைக்கு புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது. 97 சதவீத இளம் வாடிக்கையாளர்களை மொபைல் பேங்கிங் சேவை கவர்ந்துள்ளது.
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், மொபைல் வாலட்டுகள், மூன்றாம் நபர் பண பரிமாற்றச் செயலிகள், மொபைல் செயலிகள் ஆகியவற்றின் பயன்பாடு கணக்கிட முடியாத அளவுக்குப் பெருகி வருகிறது. டிஜிட்டல் மயமாக்கல் மூலம் மற்றத்துறைகளை விட வங்கித்துறை கூடுதல் பலன் பெற்றிருக்கிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பிளாக்செயின், ஐ.ஓ.டி., போன்றவை, வங்கிச் சேவையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மோசடிகளைக் கண்டறிதல், வாடிக்கையாளர் சேவை, நிதிப் பகுப்பாய்வு போன்றவற்றில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் சிறந்த சேவைகளை வழங்கும்.
பிளாக்செயின் தொழில்நுட்பமானது பணப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாக மற்றும் வெளிப்படையாக பின்தொடரவும், தேவையற்ற தலையீடுகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படும்.
பயோமெட்ரிக்ஸ் தொழில்நுட்பமானது இணையவழி வங்கிச் சேவைகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், கடவுச் சொல் பயன்பாடுகளைக் குறைக்கவும், விரல் ரேகை மற்றும் முக அடையாளமறிதல் வங்கிகள் பயன்படுத்தும்.
மொபைல் வழி பரிவர்த்தனைகளானது ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்தாலும், இன்னும் எளிதாக்கவும், பாதுகாப்பை அதிகரிக்கவும் பயன்படும்.
மெய்நிகர் மற்றும் ஆகுமென்டட் ரியாலிட்டி தொழில்நுட்பமானது பயிற்சி, வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங் துறைகளில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஐ.ஓ.டி. தொழில்நுட்பமானது சென்சார்கள் மற்றும் இதர உபகரணங்களை வங்கிக் கருவிகளில் இணைப்பதன் வாயிலாக, புதிய வழிமுறைகளின் வாயிலாக நிதிச் சொத்துகளை பராமரிக்கவும் மேற்பார்வை செய்யவும் பயன்படும்.
வங்கித் துறையில் தொழில்நுட்பங்களின் பயன்பாடானது, பரிணாம வளர்ச்சி பெற்று, தொடர்ந்து விரிவடைந்து, வங்கிகளின் திறனை மேம்படுத்தும்.