அமெரிக்காவில் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்திலிருந்து தெற்கே சுமார் 90 கிமீ தொலைவில் நியூ ஜெர்சியில் அமைந்துள்ளது அக்ஷர்தாம் திருக்கோவில்.
உலகின் 2-வது பெரிய இந்து கோவில் இது. 19 -ம் நூற்றாண்டின் இந்து ஆன்மீகத்தலைவரான பகவான் ஸ்வாமி நாராயணனின் நினைவாக இந்த பிரமாண்ட கோவில் அமைக்கப்பட்டுள்ளது. நியூ ஜெர்சியில் அமைந்துள்ள இந்த திருக்கோவில், 183 ஏக்கருக்கு மேல் பரந்து விரிந்துள்ளது.
2011 முதல் 2023 வரை, 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலும் இருந்து 12,500 தன்னார்வலர்களால் கட்டப்பட்டது.
பண்டைய இந்து வேதங்களின் படியும், இந்திய கலாச்சாரத்தின் படியும், 10,000 சிலைகள் மற்றும் இந்திய இசைக்கருவிகள் மற்றும் நடன வடிவங்களில் இங்குள்ள சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோவில் 12 துணைக் திருக்கோவில்கள் 9 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பல்கேரியா மற்றும் துருக்கியில் இருந்து சுண்ணாம்புக்கல், கிரீஸ், துருக்கி மற்றும் இத்தாலியில் இருந்து பளிங்குக்கல், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து கிரானைட் கற்கள், இந்தியாவில் இருந்து மணற்கல் என 1,000 ஆண்டுகள் தாங்கும் வலிமையையுடன் கட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் காவிரி உள்ளிட்ட புனித நதிகள், அமெரிக்காவின் 50 மாநிலங்களில் உள்ள நதிகள் என உலகம் முடிவதிலுமிருந்து 300 -க்கும் மேற்பட்ட நதிகளில் இருந்து புனித நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.
இப்படிச் சிறப்பு வாய்ந்த இந்த திருக்கோவில் வரும் 8 -ம் தேதி திறக்கப்பட உள்ளது. ஆனால், 18 -ம் தேதி முதலே பக்தர்கள் செல்ல முடியும். திங்கள் முதல் வெள்ளி வரை, காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரை திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.