ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 71 பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை இந்தியா 16 தங்கம், 26 வெள்ளி, 29 வெண்கலம் என மொத்தமாக 71 பதக்கங்களை வென்றுள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்ற அதிகபட்ச பதக்கங்கள் எண்ணிக்கை இதுவாகும். இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 16 தங்கம் உட்பட 70 பதக்கங்களை வென்றிருந்தது.
India shines brighter than ever before at the Asian Games!
With 71 medals, we are celebrating our best-ever medal tally, a testament to the unparalleled dedication, grit and sporting spirit of our athletes.
Every medal highlights a life journey of hard work and passion.
— Narendra Modi (@narendramodi) October 4, 2023
இந்நிலையில் ஆசியக் கோப்பையில் 71 பதக்கங்களை வென்று இந்தியா வரலாற்று சாதனையை பாரத பிரதமர் மோடி தனது வாட்ஸாப் சேனலில் பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா முன்பை விட இந்த ஆண்டில் பிரகாசமாக ஜொலித்து வருகிறது. 71 பதக்கங்களுடன், எங்களது பதக்க எண்ணிக்கையைக் நாங்கள் கொண்டாடுகிறோம். இது எங்கள் விளையாட்டு வீரர்களின் ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் விளையாட்டு மனப்பான்மைக்கு சான்றாகும்.
ஒவ்வொருப் பதக்கமும் வீரர்களின் கடின உழைப்பையும், அவர்கள் விளையாட்டு மேல் கொண்டுள்ள ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது. இது ஒட்டுமொத்தத் தேசத்திற்கும் பெருமையான தருணம். எங்கள் விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.