தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு உடல் நலக்குறைவு, இரண்டு வாரங்களுக்கு ஓய்வெடுக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி ஆகியவற்றால் அண்ணாமலை பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் என் மண் என் மக்கள்”பாதயாத்திரை அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நமது மாநில தலைவர் திரு.@annamalai_k அவர்களின் #EnMannEnMakkal நடைபயணம் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை… pic.twitter.com/3irj0T65Zq
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) October 4, 2023
இது குறித்து தமிழக பாஜக தனது எக்ஸ் பதிவில்,
பாஜக மாநிலத் தலைவர் ”அண்ணாமலையின் என் மண் என் மக்கள்”பாதயாத்திரை அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கவிருந்த நிலையில், தற்போது மாநில தலைவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அக்டோபர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நாளை திட்டமிட்டபடி மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். திருத்தப்பட்ட நடைபயண பட்டியல் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலையின் உடல் நிலை குறித்த மருத்துவ அறிக்கையில்,
அண்ணாமலைக்கு இருமல், சுவாசிப்பதில் சிரமம், தொண்டை வலி, உடல் வலி மற்றும் சோர்வு ஆகிய காரணமாக கடந்த 3ம் தேதி அன்று மாலை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நுரையீரல் நிபுணரால் அவர் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு, CT ஸ்கேன் செய்யப்பட்டது. மூச்சுக்குழாயில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவருக்கு சில மருந்துகள் கொடுக்கப்பட்டு, உடல் நிலை சீராகி அவர் வீடு திரும்பினார். அவருக்கு 5 நாட்களுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு, 5 நாட்கள் முடிவில் ஆய்வுக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர் குணமடைய இரண்டு வாரங்களுக்கு ஓய்வு பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்ட்டுள்ளது.