ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!
Sep 13, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆயுஷ்மான் பவ திட்டம்: 64,000 பேர் உறுப்பு தானம் செய்ய பதிவு!

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை நடந்தது!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 4, 2023, 05:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய அளவில் ஆயுஷ்மான் பவ பிரச்சாரத்தின் கீழ், சுமார் 64,000 பேர் தங்களது உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் ஆயுஷ்மான் பவ திட்டம் தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருந்தார். மேலும், செப்டம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறும், இந்நிகழ்ச்சியின்போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் கூறினார். இது ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு 5 லட்சம் வரை மருத்துவச் சிகிச்சை பெறும் திட்டமாகும்.

அதன்படி, இத்திட்டம் செப்டம்பர் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரை நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்தான் 64,000 பேர் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்து, பதிவு செய்திருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்திருக்கிறார். இத்திட்டத்தில் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் உடல் உறுப்பு தானம் செய்ய பதிவு செய்திருக்கிறார்.

இதுகுறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “ஆயுஷ்மான் பவ திட்டம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது. மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. இத்திட்டத்தின் கீழ், சுமார் 2.70 லட்சம் மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதன் மூலம், 1.61 கோடி மக்கள் பயன் பெற்றனர். இத்திட்டத்தின் கீழ், சுமார் 64 லட்சம் ஆயுஷ்மான் அட்டைகள் வழங்கப்பட்டது. 1 கோடிக்கும் அதிகமான ஏ.பி.ஹெச்.ஏ. அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது.

மேலும், இத்திட்டத்தின் கீழ், 14,157 இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 2,28,000 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டது. அதோடு, 23 லட்சத்திற்கும் அதிகமான நோயாளிகள் ஓ.பி.டி. ஆலோசனைகளுக்கு வருகை தந்தனர். இது தவிர, 30,000 பெரிய மற்றும் சிறிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறையானது, ஒவ்வொரு கிராமம் மற்றும் பஞ்சாயத்தில் உள்ள ஆயுஷ்மான் சபைகள் மூலம் சுகாதார சேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

Tags: Ayusman bhavacampaignorgans
Share
Tweet
SendShare
Previous Post

நாளை திட்டமிட்டபடி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெறும்!

Next Post

சந்திரயான் -3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேலுக்கு டாக்டர் பட்டம் – முழு விவரம்

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies