தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித் தலைவர், துறை செயலாளர், துறைமுகம் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழக அரசு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராஜாராமன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராகவும், குமார் ஜெயந்த், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைச் செயலாளராகவும், சிஜி தாமஸ், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைச் செயலாளராகவும், ஆனந்த குமார், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி இயக்குநராகவும், அர்ச்சனா பட்நாயக், தொழில்துறை ஆணையராக மாற்றப்பட்டுள்ளனர்.
அதேபோல, நுகர்வோர் பாதுகாப்பு ஆணையராக பூஜா குல்கர்னியும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை சிறப்புச் செயலாளராகக் கலையரசியும், வருவாய் நிர்வாகத் துறை கூடுதல் ஆணையராக பிரகாஷ்-ம், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவராக வெங்கடப் பிரியாவும் , தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சிக் கழகத் தலைவராக விக்ரம் கபூரும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியராக மோனிகா ராணாவும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரிய செயல் இயக்குநராகச் சரவணன் ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.