புனேவில் உள்ள இருசக்கர சேவை நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்தில், 25 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் உள்ள சிங்காட் சாலையில் இருசக்கர சேவை நிலையம் உள்ளது.
இன்று காலை சேவை நிலையத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனால் சேவை நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தீப்பிடித்து எரிந்தது.
இதுகுறித்து, தீயணைப்பு கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், நீண்ட நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்த தீவிபத்தில் சேவை நிலையத்தில் இருந்த 25 இருசக்கர வாகனங்கள் எரிந்து சேதமானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.