”என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார் எனத தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியாார் மண்டபத்தில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, தேர்தல் கூட்டணி குறித்து டெல்லியிலுள்ள பாஜக மேலிட தலைவர்கள் தான் இனி கூட்டணி பற்றி முடிவெடுப்பார்கள். எனது கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். முடிவை அவர்கள்தான் எடுக்க வேண்டும்.
கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும். அது அவர்களின் விருப்பம். அதைப் பற்றி நாம் ஏன் பேசவேண்டும். ஜனவரியில் ”என் மண் என் மக்கள்” நடைபயண நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார்.
சென்னையில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்திற்கு 10 லட்சம் தொண்டர்கள் திரட்ட வேண்டும் என கூறியுள்ளார்.
தமிழகத்திலுள்ள 39 தொகுதிகளுக்கும் தனித்தனியாக குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. நாடாளுமன்ற தேர்தல் வருவதையொட்டி அடுத்த 7 மாதங்கள் கடுமையாக உழைக்க வேண்டும். பெண்களை அதிக எண்ணிக்கையில் பூத் கமிட்டியில் சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, 2024 தேர்தலில் யாருடன் மோத வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளோம். தமிழகத்தில் பா.ஜ.க மற்றும் திமுக இடையே தான் போட்டி கூறினார். கூட்டணியில் இருந்து அதிமுக விலகியதால் சந்தோஷமோ வருத்தமோ இல்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்கும் கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைக்கும்.
தமிழகத்தில் பாஜக வலிமை அடைய வேண்டும் என்பது மட்டும் தான் எனது நோக்கம் . வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் வரும். கூட்டணியில் யாரை சேர்ப்பது, கூட்டணியை விரிவுப்படுத்துவது குறித்தெல்லாம் தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார். எந்த கட்சியும் கூட்டணி குறித்து யோசிக்காமல் முடிவெடுக்க மாட்டார்கள் ஆலோசனை தான் முடிவு எடுப்பார்கள்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டதால் தான் பாஜக மூன்றாம் இடத்திற்கு வந்தது. ஒவ்வொரு கட்சியும் அவரவர் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனத் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன் . இராதாகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவை வெற்றிப் பெற வைப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மூன்றாவது முறை மோடி பிரதமராக வேண்டும், அதற்கான ஆலோசனை செய்யப்பட்டது. அதிமுக பா.ஜ.க கூட்டணி முறிவால் எந்த பின்னடைவும் இல்லை. பா.ஜ.க தனித்து போட்டியிடாத கட்சி இல்லை. ஏற்கனவே தனித்து போட்டியிட்டு வெற்றியைப் பெற்ற கட்சி என தெரிவித்தார்.