கோவாவிலிருந்து ராகுல் காந்தி வாங்கிவந்த, நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் என டெல்லி வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.
உலக விலங்குகள் தினத்தையொட்டி காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி செய்த ஒரு செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, அண்மையில் கோவாவுக்குப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அங்குள்ள ஒரு குடும்பத்தினரிடம் இருந்து ஒரு பெண் நாய் குட்டியான நூரியை மட்டும் வாங்கி வந்தார். ராகுல் காந்தி வாங்கி வந்த அந்த நூரி என்ற நாய் குட்டி, ஜாக் ரஸ்ஸல் டெரியர் இனத்தைச் சேர்ந்தது.
டெல்லியில் தனது வீட்டுக்குச் சென்ற ராகுல் அந்த நாய் குட்டியைக் கூடையில் வைத்து மூடி தனது தாய் சோனியா காந்திக்கு பரிசளித்தார். மேலும், அந்த கூடையைத் திறந்து பார்க்க வேண்டும் என கூறினார்.
அந்த பெட்டியைத் திறந்துபார்த்த சோனியா நாய் குட்டி இருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த நிலையில், ராகுல்காந்தி வாங்கியது வெளிநாட்டு நாய். ஏன் அவருக்கு இந்தியாவில் உள்ள நாய்கள் பிடிக்கவில்லையா. அவர் இன்னும் வெளிநாட்டு மோகத்தில் தான் இருக்கிறார்.
வெளிநாடு நாய்கள் வாங்குவதில் பல்வேறு சட்ட திட்டங்கள் உள்ளது. அதை எல்லாம் ராகுல் காந்தி கடைப்பிடிக்கவே இல்லை.
அவர் ஒரு கட்சியின் தலைவராகச் சிறிது காலமும், எம்பியுமாக இருக்கிறார். ஆனால், நாட்டில் உள்ள சட்ட திட்டங்களை அறிந்து கொள்ளாமல் விளையாடி வருகிறார் என்கின்றனர்.
இந்த நிலையில், நாய் குட்டி விவகாரம் விரைவில் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.