ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடை பிரிவில் அன்டிம் பங்கல் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று இந்தியா இரண்டு தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள நிலையில் தற்போது இந்தியாவுக்கு மற்றொருப் பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று பெண்களுக்கான 53 கிலோ எடைப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்பாக மல்யுத்த வீராங்கனை அன்டிம் பங்கல், பூஜா கெலாட் ஆகியோர் பங்குப்பெற்றனர்.
இதில் அன்டிம் பங்கல் உடன் மங்கோலியாவை சேர்ந்தப் போலோர்டுயா பாட் ஓசீருடன் விளையாடினர். இதில் 19 வயதான அன்டிம் 3-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
அன்டிம் ஆரம்பத்திலே தனது காலால் மங்கோலிய வீராங்கனையை மடக்கிப்பிடிக்க முயற்சித்தார். ஆனால், அவர் அன்டிமின் பிடியில் இருந்து தப்பிவிட்டார். ஆனாலும், அடுத்தடுத்து அன்டிமின் அபார ஆட்டத்தால் மங்கோலியா வீராங்கனை அவரிடம் தோல்வியை தழுவினார். 19 வயதே நிரம்பிய அன்டிமின் இந்த வெற்றிக்கு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் இரசிகர்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.