மயிலாடுதுறை: நாட்டு வெடி ஆலையில் பயங்கர விபத்து - 4 பேர் உடல் சிதறி பலி!
Sep 13, 2026, 02:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறை: நாட்டு வெடி ஆலையில் பயங்கர விபத்து – 4 பேர் உடல் சிதறி பலி!

Murugesan M by Murugesan M
Oct 5, 2023, 06:22 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் நாட்டு வெடிகள் தயாரித்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அடுத்த தில்லையாடி காளியம்மன் கோவில் தெரு உள்ளது. இங்கு, அந்த பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவருக்குச் சொந்தமான நாட்டு வெடி தயாரிக்கும் குடோன் உள்ளது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 7 தொழிலாளர்கள் அங்கு நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது, யாரும் எதிர்பாராத வகையில் திடீரென்று நாட்டு வெடி பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில், வெடி தயாரிப்பு பணியில் ஈட்டுப்பட்டிருந்த மதன், நிக்கேஷ், ராகவன் தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் ஆகிய 4 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

உடலின் பாகங்களை அடையாளம் காண முடியாதபடி பல்வேறு இடங்களில் சிதறிகிடந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் அருகிலிருந்த வீடுகள் குலுங்கின. புகைமூட்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள் பெரும் அச்சமடைந்தனர்.

மேலும், மணிவண்ணன், பக்கிரிசாமி, மாரியப்பன், மாசிலாமணி ஆகியோர் படுகாயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், யாராவது இடிபாடுகளில் சிக்கி உள்ளனரா என்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.

வெடி விபத்து தொடர்பாக, நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ்சிங் நேரில் விசாரணை மேற்கொண்டார். மேலும், இந்த வெடி விபத்து குறித்து பொறையார் காவல்துறையினர் சம்பவ இடத்தில் முகாமிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வெடி தயாரிப்பு நிறுவன உரிமையாளர் மோகன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Tags: Terrible accident
Share
Tweet
SendShare
Previous Post

நியூஸ் கிளிக்கின் சதி: புட்டுப்புட்டு வைத்த டெல்லி காவல்துறை!

Next Post

53 கிலோ எடை பிரிவில் வெண்கலம் வென்ற இளம் வீராங்கனை !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies