இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்கள் 7 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்தப்பட உள்ளதாக இந்திய ராணுவம் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய விமானப்படையில், 272 சுகாய் விமானங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த விமானங்கள் விமானப்படையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்போது, இந்த விமானங்கள் சிறப்பாகச் செயல்பட்டு வந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக, இந்த விமானத்தை மேம்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், இந்திய விமானப்படையில் உள்ள சுகாய் விமானங்கள் 7 மில்லியன் டாலர் செலவில் மேம்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் விமானங்களில் அதி நவீன வசதிகளைச் செய்ய முடிவு செய்துள்ளது. குறிப்பாக, புதிய ரேடார் கருவிகள் பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் விமானத்தின் ரேடார் புதிய பொலிவு பெறும்.
இதன் முதற்கட்டமாக 84 விமானங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதனையடுத்து, 150 விமானங்கள் திறன் மேம்படுத்தப்படும் என இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.