அடுத்த 2 ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதமும், நக்ஸலிசமும் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இடதுசாரி தீவிரவாதம் குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இக்கூட்டத்தில், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் அர்ஜுன் முண்டா, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் துறை இணை அமைச்சர் அஸ்வினி சௌபே, தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் தேவுசின் சவுகான், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை பணியகத்தின் இயக்குனர் தபன் டேகா மற்றும் தேசிய புலனாய்வு முகமையின் இயக்குனர் ஜெனரல்கள் சஷாஸ்த்ரா சீமா பால் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்புப் படை, இந்தோ-திபெத்திய எல்லை போலீஸார் மற்றும் உள்துறைச் செயலாளர்கள், நக்சல் பாதித்த மாநிலங்களின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தை தொடங்கி வைத்த உள்துறை செயலாளர் அஜய் பல்லா, கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். தொடர்ந்து, கூட்டத்திற்குத் தலைமை வகித்துப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “கடந்த 4 தசாப்தங்களில் 2022-ம் ஆண்டுதான் இடதுசாரித் தீவிரவாதத்தால் ஏற்பட்ட வன்முறை மற்றும் இறப்புகள் குறைந்தளவில் பதிவாகி உள்ளன. நாட்டிலிருந்து இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக வேரறுப்பதற்கான வரைபடத்தை தயாரிப்பதை இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.
முன்னதாக, இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நக்ஸலிசம் மனிதகுலத்திற்கு ஒரு சாபமாகும். அதை அனைத்து வடிவங்களிலும் வேரோடு பிடுங்குவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான நமது முயற்சிகளை முன்னெடுப்பதற்காக, டெல்லியில் இன்று நடைபெறும் இடதுசாரி தீவிரவாதம் தொடர்பான மறு ஆய்வுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குகிறேன். இடதுசாரி தீவிரவாதம் இல்லாத தேசம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
Naxalism is a curse to humanity and we are resolved to uproot it in all its forms.
I look forward to chairing the Review Meeting on Left Wing Extremism (LWE) in New Delhi today to further our efforts to fulfil PM @narendramodi Ji’s vision of an LWE-free nation. https://t.co/l3bEtP0Vv3
— Amit Shah (@AmitShah) October 6, 2023