49 ஓவர்களில் 286 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த பாகிஸ்தான் அணி.
2023 ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகிறது.
ஐதராபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வுச் செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஃபகார் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர்.
இதில் ஃபகார் ஜமான் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்ததாக களமிறங்கிய பாபர் ஆசாம் 5 ரன்களில் சாகிப் சுல்பிகர் பந்தில் ஆட்டமிழந்து போனார். அடுத்ததாக களமிறங்கிய ரிஸ்வான் மற்றும் சாக்கில் சிறப்பாக விளையாடி தலா 68 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் அணியின் நவாஸ் 39 பந்துகளிலும் ஷதாப் கான் 32 பந்துகளிலும் ஆட்டமிழக்க 49 வது ஓவரில் பாகிஸ்தான் அணி 286 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பாஸ் டி லீடே 4 விக்கெட்களும் கொலின் அக்கர்மேன் 2 விக்கெட்களும் எடுத்தனர்.
இதன் மூலம் நெதர்லாந்து அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உள்ளது.