தமிழகத்தில் உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு செய்யப்படும் எனத் தமிழக அரசு அறிவித்ததை அடுத்து, 1,616 பேர் பதிவு செய்துள்ளனர்.
தேசிய அளவில் உடல் உறுப்பு தானம் செய்வதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது. அதேவேளையில், அதிக அளவில் உடலுறுப்புகள் தேவைப்படுகின்றன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் பேசுகையில், ஒருவர் எப்போது இறப்பார் என யாருக்கும் தெரியாது. ஆனால், இந்த உலகில் ஒரு உயிர் பிறந்தால், அதற்கு நிச்சயம் மரணம் என்பது உண்டு. அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேவேளையில், ஒருவர் இறந்த பின்பு, தனது உடல் உறுப்பை தானம் செய்ய விரும்புகின்றனர். அதை சட்டப்படி செய்ய வேண்டும்.
இந்த நிலையில்தான், உடல் உறுப்பு தானம் செய்வோரை அதிகரிக்கும் வகையிலும், உடல் உறுப்பு தானம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், உடல் உறுப்பு தானம் செய்வோர், மரணத்தின் போது அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் எனத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்ட பின்பு 1,616 பேர் உடல் உறுப்பு தானம் செய்யப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சிறுநீரகம் வேண்டி 6,173 பேரும், கல்லீரல் வேண்டி 449 பேரும், இதயம் வேண்டி 72 பேரும், நுரையீரல் வேண்டி 60 பேரும், கணையம் உள்ளிட்ட உறுப்புகள் வேண்டியும், ஆக மொத்தம் 6,811 பேர் பதிவு செய்துள்ளனர்.
மூளைச்சாவு அடைவார்கள் மற்றும் பதிவு செய்துள்ளவர்களின் உடல் உறுப்புகளைப் வழங்கி மறு வாழ்வு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில்தான், அரசு அறிவிப்புக்குப் பின்னர் 34, 650 பேர் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்துள்ளனர் என்றார்.