கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதிக்கு ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கத்தின் தலைவர் டாக்டர் மோகன் பகவத் இன்று வருகை தந்துள்ளார்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கம் இந்து தேசியவாதிகளால் உருவாக்கப்பட்ட வலதுசாரி இந்து அமைப்பாகும். இது கடந்த 1925 செப்டம்பர் 27 -ம் தேதி விஜயதசமி அன்று உருவாக்கப்பட்டது.
சங்கமானது ஆரம்பிக்கப்பட்ட 10 வருடங்களுக்குள் வட இந்தியாவில் மிகுந்த செல்வாக்கு பெற்றது. தற்போது, தென் மாநிலங்கள் உள்பட உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றுள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணம், சாதிய ஏற்றத்தாழ்வுகளை நீக்கி இந்து என்ற அடையாளத்துடன் ஒன்று சேர்வோம் என்ற முழக்கமே. ஆர்.எஸ்.எஸ் இயக்கம் இந்தியாவில் மட்டுமில்லாது வெளிநாடுகளிலும் சிறப்புடன் இயங்கி வருகிறது.
இந்த நிலையில், ராஷ்ட்ரீய சுவயம் சேவக் சங்கத்தின் தலைவர் டாக்டர் மோகன் பகவத் நேற்று, கர்நாடகாவில் உள்ள சிருங்கேரி மடத்திற்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்தார்.
இந்த நிலையில், இன்று கேரளாவிற்கு விஜயம் செய்துள்ளார். கோழிக்கோடு வந்து சேர்ந்துள்ள டாக்டர் மோகன் பகவத், கேசரி பவனில் சங்க நூற்றாண்டையொட்டி நடை பெற்று வரும் தொடர் சொற்பொழிவில் இன்று மாலை உரையாற்ற உள்ளார். இதனையொட்டி, விழா நடைபெறும் இடம் களைகட்டியுள்ளது. ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.