இஸ்ரேல் மீதான பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.
யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தன்னாட்சி பெற்ற காஸா நாட்டைக் கைப்பற்றும் விவகாரத்தில் இரு நாடுகளும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன. ஆனால், காஸா நாடோ, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் இஸ்ரேல் நாட்டின் மீது 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீதும் துப்பாக்குச் சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் மாகாணத்தில் மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இஸ்ரேலும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
இந்த நிலையில்தான், இஸ்ரேல் மீதான பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு துணையாக நிற்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்திருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், “நிலைமை சாதாரணமாக இல்லை. ஆனால், இஸ்ரேல் வெற்றிபெறும். இந்தியாவின் தார்மீக ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
Thank you @PMOIndia. India’s moral support is much appreciated. Israel will prevail. https://t.co/T6Xsu7gsW5
— Naor Gilon (@NaorGilon) October 7, 2023