இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி உறுதி!
Sep 12, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும்: பிரதமர் மோடி உறுதி!

இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி: இஸ்ரேல் தூதர் பதில்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 7, 2023, 06:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் மீதான பாலஸ்தீன தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், இந்தியாவின் ஆதரவுக்கு நன்றி என்று தெரிவித்திருக்கிறார்.

யூதர்களும், கிறிஸ்தவர்களும் பெரும்பான்மையாக வசிக்கும் இஸ்ரேல் நாட்டுக்கும், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பாலஸ்தீன நாட்டுக்கும் இடையே நீண்டகாலமாகவே மோதல் போக்கு இருந்து வருகிறது. குறிப்பாக, இரு நாடுகளுக்கும் இடையே உள்ள தன்னாட்சி பெற்ற காஸா நாட்டைக் கைப்பற்றும் விவகாரத்தில் இரு நாடுகளும் அடிக்கடி மோதிக்கொள்கின்றன. ஆனால், காஸா நாடோ, ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று காலை ஹமாஸ் மற்றும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்கள் இஸ்ரேல் நாட்டின் மீது 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட்களை ஏவி தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலுக்குள் ஊடுருவி அப்பாவி மக்கள் மீதும் துப்பாக்குச் சூடு தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில், இஸ்ரேல் நாட்டின் ஷார் ஹனேகேவ் மாகாணத்தில் மேயர் உட்பட 22 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருக்கிறார்கள். இதையடுத்து, இஸ்ரேலும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், இஸ்ரேல் மீதான பாலஸ்தீனத்தின் தாக்குதலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கும் பாரதப் பிரதமர் மோடி, இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும் என்று தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “இஸ்ரேலில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் பற்றிய செய்தியால் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இஸ்ரேலுக்கு துணையாக நிற்கிறோம்” என்று  தெரிவித்திருக்கிறார்.

இதற்கு பதிலளித்திருக்கும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் நவர் கிலோன், “நிலைமை சாதாரணமாக இல்லை. ஆனால், இஸ்ரேல் வெற்றிபெறும். இந்தியாவின் தார்மீக ஆதரவுக்கு மிக்க நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.

Deeply shocked by the news of terrorist attacks in Israel. Our thoughts and prayers are with the innocent victims and their families. We stand in solidarity with Israel at this difficult hour.

— Narendra Modi (@narendramodi) October 7, 2023

 

Thank you @PMOIndia. India’s moral support is much appreciated. Israel will prevail. https://t.co/T6Xsu7gsW5

— Naor Gilon (@NaorGilon) October 7, 2023

 

Tags: PM ModiTWEETIsraelSupport
Share
Tweet
SendShare
Previous Post

பிரபல யூடியூபர் டி.டி.எஃப். வாசனின் ஓட்டுநர் உரிமம் ரத்து

Next Post

சிறுதானியம் மீதான வரி குறைப்பு: ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies