92-வது இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முப்படைகளின் தலைமைத் தளபதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
92வதுஇந்திய விமானப்படை (ஐ.ஏ.எஃப்) தினத்தை முன்னிட்டு அனைத்து விமானப்படை வீரர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான சந்தர்ப்பம், இந்திய விமானப்படையின் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் தேசத்திற்கான இணையற்ற சேவையைக் குறிக்கிறது.
இந்த மைல்கல்லை நாம் கொண்டாடும் வேளையில், தேச சேவையில் உயிர் தியாகம் செய்த துணிச்சலான இதயங்களுக்கும் நாம் மரியாதை செலுத்துகிறோம். அவர்களின் தைரியம், வீரம் மற்றும் அர்ப்பணிப்பு, பல தலைமுறை இந்தியர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.
நாட்டின் அனைத்துப் போர்களிலும் இந்திய விமானப்படை முக்கிய பங்கு வகித்துள்ளது, வான்வழித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது, எல்லைகளுக்கு உள்ளேயும் வெளியேயும் மனிதாபிமான உதவி மற்றும் பேரழிவு நிவாரணப் பணிகள் மூலம் நிவாரணம் வழங்கியுள்ளது.
நட்பு நாடுகளுடனான சர்வதேச விமானப் பயிற்சிகளில் வழக்கமான மற்றும் வெற்றிகரமான செயல்பாடுகளின் வளமான வரலாற்றை இந்திய விமானப்படை கொண்டுள்ளது. இது உலகளாவிய விமானப் படைகளுடன் பரஸ்பர செயல்திறனை போதுமான அளவு நிரூபித்துள்ளது, இதன் மூலம் நமது உடனடி அண்டை நாடுகளிலும், நமது விரிவாக்கப்பட்ட சூழலிலும் திறம்பட செயல்படுவதற்கான அதன் திறனை நிறுவியுள்ளது.
‘தற்சார்பு இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தி மூலம் திறன் மேம்பாட்டை இந்திய விமானப்படை ஊக்குவித்துள்ளது. இந்திய விமானப்படையால் உருவாக்கப்பட்ட வெற்றிகரமான மெஹர் பாபா ட்ரோன் போட்டியின் விளைவாக, மின்னணு போர்முறை வடிவத்தில் படை பெருக்கிகளின் திறனை அதிகரிப்பது, நாளைய போரை எதிர்கொள்ள விண்வெளி மற்றும் சைபர் திறன்களைப் பயன்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவிகள் மற்றும் ஸ்வர்ம் ஆளில்லா வெடிமருந்து அமைப்புகள் போன்ற சமீபத்திய தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய அமைப்புகள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நவீனமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான அர்ப்பணிப்புடன், 21-ஆம் நூற்றாண்டின் சவால்களை ஏற்றுக்கொள்ள இந்திய விமானப்படை தயாராக உள்ளது.
இந்த 92வது இந்திய விமானப்படை தினத்தில், இந்திய விமானப்படையை கௌரவிப்பதிலும், நமது வான் எல்லையையும், நமது எதிர்காலத்தையும் பாதுகாக்க உயரத்தில் பறக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு நமது நன்றியைத் தெரிவிப்பதில் நாம் அனைவரும் ஒன்றாக நிற்போம். இது நமது தேசத்தின் வலிமை மற்றும் உறுதியின் அடையாளமாகத் தொடரும். இந்திய விமானப்படை எப்போதும் பெருமையின் புதிய உயரங்களை அடையட்டும்.