ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வீரர் விராட் கோலி டைவ் அடித்து பிடித்த கேட்ச் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
இன்று நடைபெற்று வரும் ஒரு நாள் உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்யை தேர்வு செய்தது. இதன் படி ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரராக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கின்னார்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா முதல் ஓவரில் பந்து வீசினார். அந்த ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 1 ரன் மட்டுமே கிடைத்தது. இரண்டாவது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அந்த ஓவரில் நான்கு ரன்கள் கிடைத்தது. மூன்றாவது ஓவரை மீண்டும் பும்ரா வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை சந்தித்த மிட்செல் மார்ஷ் பந்தை எட்ஜ் செய்தார்.
ஸ்லிப்பில் பீல்டிங் நின்று இருந்த விராட் கோலி ஒரு விநாடி கூட யோசிக்காமல் பாய்ந்து, டைவ் அடித்து பந்தை பிடித்தார். ரசிகர்கள் அப்போது ஆர்ப்பரித்தனர். மிட்செல் மார்ஷ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இதுவரை உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் விக்கெட் கீப்பர் அல்லாதவர்களில் அதிக கேட்ச் பிடித்தவர் அனில் கும்ப்ளே. அவர் 14 கேட்ச்களை பிடித்து இருந்தார். அவரை முந்தி இருக்கும் விராட் கோலி தற்போது 15 கேட்ச்களை பிடித்து இருக்கிறார்.
இதே பட்டியலில் அனில் கும்ப்ளேவுக்கு அடுத்த இடங்களில் கபில் தேவ் 12, சச்சின் டெண்டுல்கர் 12 கேட்ச்களை பிடித்து உள்ளனர். இந்த ஜாம்பவான்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்து விராட் கோலி தான் ஒரு சிறந்த பீல்டர் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்.