செயற்கை நுண்ணறிவு மூலம் வயதான பாட்டிகள் வண்டி ஓட்டுவதுப் போன்றப் புகைப்படங்களைப் பகிரும் நெட்டிசன்கள்.
காலம் வளருவதுப் போல நாமும் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம். நம்மோடுச் சேர்ந்துத் தொழில் நுட்பங்களும் வளர்த்துக் கொண்டிருக்கிறது. தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நம்மால் முடியாத காரியத்தை கூட முடித்ததுப் போன்று புகைப்படம் எடுக்க முடியும்.
அமெரிக்காவில் உள்ளவரை ஆண்டிபட்டியில் இருப்பதுப் போன்றும், சென்னையில் உள்ளவரை செய்வாய் கிரகத்தில் இருப்பதுப் போன்றும் மாற்றி அமைக்கும் தொழில் நுட்பங்களும் வந்துள்ளது.
இந்தத் தொழில் நுட்பங்களைப் பயன் படுத்தி விலங்குகள் செல்பி எடுப்பதுப் போன்றப் புகைப்படங்கள் வந்துள்ளதை பார்த்தோம். அதைத் தொடர்ந்து இப்போது வயதானப் பாட்டிகள் புல்லட் ஓட்டுவதுப் போன்ற புகைப்படங்களும் வந்துள்ளது.
இதில் இந்தியாவில் உள்ள பாட்டிகள் புடவை கட்டிக்கொண்டு கூளிங்க கிளாஸ் போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனங்களை ஸ்டைலாக ஓட்டி வருவது போல AI தொழில் நுட்பம் மூலம் நெட்சங்கள் காண்பித்துள்ளார். இந்த புகை படங்கள் உண்மை என்று நம்பும் வைகையில் உள்ளது.