உலகக்கோப்பைத் தொடரில் நெதர்லாந்து அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு.
ஒரு நாள் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் நியூசிலாந்து மற்றும் நெதர்லாந்து அணிகள் ஹைதராபாத்தில் விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்துவீச்சைத் தேர்வுச் செய்தது. அதன் படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் களமிறங்கினர்.
இவர்கள் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி வந்த நிலையில் டெவோன் கான்வே 40 பந்துகளில் 32 ரன்களுக்கு ரோலோஃப் வான் டெர் மெர்வேவின் பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா 51 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக வில் யங் 80 பந்துகளில் 70 ரன்களை எடுத்து பால் வான் மீகெரென் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 184/3 ஆகா இருந்தது. அடுத்ததாக களமிறங்கிய டேரில் மிட்செல் 47 பந்துகளில் 48 ரன்களை அடித்து பால் வான் மீகெரென் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய டாம் லாதம் 46 பந்துகளில் அரைசதம் எடுத்து ஆர்யன் பந்தில் ஆட்டமிழந்தார். கடைசியாக நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 322 ரன்களை எடுத்தது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக பால் வான் மீகெரென், ரோலோஃப் வான் டெர் மெர்வே, ஆர்யன் ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.
நெதர்லாந்து அணி வெற்றிப் பெற 323 ரன்கள் இலக்காக உள்ளது.