10 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு இருமுறை பொதுத்தேர்வு எழுத தேவையில்லை என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் புதிய கல்விக்கொள்கை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. அதன்படி, மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும், புதிய கல்வி கொள்கையை அமல்படுத்திய மாநில பள்ளிகளிலும் ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த இரண்டையும் எழுதும் மாணவர்கள், அதில் எந்த தேர்வில் நல்ல மதிப்பெண் எடுக்கின்றனரோ அதனை எடுத்துக் கொள்ளலாம்.
இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இருமுறை தேர்வு எழுதுவது கட்டாயமில்லை. மாணவர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டது எனக் குறிப்பிட்டார். மேலும், இது கட்டாயம் இல்லை எனவும், இரண்டு தேர்வையும் எழுத விரும்பினால் மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர் என்றார்.
தமிழ்நாட்டில் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்படாத நிலையில், இங்கு உள்ள மாநில அரசு தனியார் பள்ளிகளுக்கும் இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.